Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 ஏப்ரல் 18 , பி.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்தில் பாடசாலை ஆரம்பமாகும் மற்றும் முடிவுறும் நேரங்களை அண்மித்த நேரங்களில் , பாடசாலைகள் அண்மித்த வீதிகளில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் ஆகியோரின் இணைத்தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தில் வியாழக்கிழமை (18) நடைபெற்றது.
பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்லும் பொதும் , பாடசாலையில் இருந்து வீடு திரும்பும் போதும் பாடசாலைகளை அண்மித்த வீதிகளில் கனரக வாகனங்கள் வேகமமாகவும் , சில நேரங்களில் வீதி ஒழுங்கு விதிகளை மீறியும் பயணிப்பதாக இக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
அதையடுத்து பாடசாலை ஆரம்பமாகும் , முடிவுறும் வேளைகளில் பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் கனரக வாகனங்களை பயணிப்பதை தடை செய்வதாக கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு , அது தொடர்பில் பொலிஸாருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எம்.றொசாந்த்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .