2025 மே 10, சனிக்கிழமை

பாடசாலைகளுக்கு வருகிறது புதிய நடைமுறை

Editorial   / 2018 ஜூன் 28 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

எதிர்காலத்தில், சிறுவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, இத்தகைய ஆபத்துகள் ஏற்படுவதைக் குறைக்கக் கூடிய வகையில், வட மாகாணக் கல்வி அமைச்சு, பாடசாலைகளுக்கு புதிய நடைமுறையொன்றை கொண்டுவருவதற்கு தீர்மானித்துள்ளதாக, வடமாகாண கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சுழிபுரம் மாணவி படுகொலை குறித்து, அவர் இன்று (28) விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

 “அந்தவகையில், வடக்கு மாகாணத்தின், பாடசாலைகளில் ஆரம்ப வகுப்புகளில் கல்வி கற்கும் மாணவர்களை, பாடசாலை முடிந்ததும் பெற்றோர்களோ அல்லது பெற்றோர்களால் பெயர் குறிப்பிடப்பட்டு நியமிக்கப்பட்டவர்களோ மாத்திரமே, பாடசாலைகளுக்கு வந்து, மாணவர்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்ற நடைமுறையைச் செயற்படுத்தத் தீர்மானித்துள்ளோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X