2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

’ பாதிக்கப்படும் மீனவர்களுக்கு நட்டஈடு வழங்க வேண்டும்’

Editorial   / 2017 ஜூலை 02 , பி.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

இழுவைப் படகுகளை, இலங்கை கடற்பகுதியில் கட்டுப்படுத்தும் சட்டமூலம் நடைமுறைக்கு வந்தால் உள்ளூர் மீனவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, பாதிக்கப்படும் உள்ளூர் மீனவர்களுக்கு நட்டஈடு வழங்கப்படவேண்டும். அது கட்டாயமான ஒன்று எனவும் தெரிவித்துள்ளார்.

இழுவைப் படகுகளை, இலங்கை கடற்பகுதியில் கட்டுப்படுத்தும் சட்டமூலம், எதிர்வரும் 6 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ள நிலையில் மேற்படி சட்டமூலம் தொடர்பாக மக்கள் கருத்தறியும் கலந்துரையாடல், யாழ். நகரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில், இன்று  (02) மாலை  இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலின்போதே நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X