2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

பாதிக்கப்பட்டோருக்கான கலந்துரையாடல்

Editorial   / 2017 ஓகஸ்ட் 21 , பி.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன் 

 

இலங்கை ஆசிரிய கல்வியியலாளர் சேவையில் பாதிக்கப்பட்டோருக்கான அவசர கலந்துரையாடல், நாளை (22) காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலைக்கு முன்பாக உள்ள எடிசன் அக்கடமியில் நடைபெறவுள்ளது. 

இக்கலந்துரையாடலில், இலங்கை ஆசிரியர் சங்கப் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் கலந்துகொள்ளவுள்ளார். 

 இதன்போது, இலங்கை ஆசிரிய கல்வியியலாளர் சேவை (SLTES) -|||இற்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து தொழில் சார் பாடங்களுக்கு விண்ணப்பித்து முதலாவது நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டு கல்வியியலில் முதல் பட்டம் இல்லை எனக் காரணம் கூறப்பட்டு இரண்டாவது நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படாதவர்களின் வழக்குத் தாக்கல் தொடர்பாக கலந்துரையாடப்படும். 

 பாதிக்கப்பட்ட அனைவரும் இதில் கலந்துகொண்டு, இலங்கை ஆசிரியர் சங்கத்தினூடாக நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்ய ஒத்துழைக்குமாறு, ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X