Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 நவம்பர் 20 , பி.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
“வரவு - செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு தரப்பக்கு பல மில்லியன் ரூபாய் நிதிகளை ஒதுக்கப்படுகின்ற அதேநேரம், பாதுகாப்பு தரப்பினரால் கொன்றொழிக்கப்பட்ட எமது மக்களின் உயிரிழப்புகள், சொத்தழிவுகள் அல்லது ஏனைய காயப்பட்டவர்கள் விசேடதேவைக்கு உட்பட்டவர்கள், பெற்றோரை இழந்த பிள்ளைகள் இவர்களுக்காக எந்தவித நிதிகளும் ஒதுக்கப்படவில்லை” என, நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
புலம்பெயர் படைப்பாளி இலண்டன் ஜெசுதா யோ எழுதிய “உயிர் வலி” என்ற கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு, முல்லைத்தீவு மாங்குளத்தில் அமைந்துள்ள உயிரிழை அமைப்பின் மண்டபத்தில் நேற்று (19) நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது,
“போருக்குள்ளால் பட்ட அனுபவங்களை நேரடியாகப் பார்த்தவர்கள் என்ற வகையில், இந்த மண்ணில் நடந்த பல்வேறு கொடுமைகளை அல்லது எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை, இந்த மண்ணில் இருக்கக்கூடிய கலைஞர்கள், எழுத்தாளர்கள் வெளிக்கொண்டுவர வேண்டும்.
“மூன்று வரவு - செலவுத்திட்டங்கள், இந்த அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டுள்ளன. இதில், போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கில் இருக்கக்கூடிய மக்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றால் எதுவும் இல்லை. அண்மையில் கூட, என்னைத் தவிர எங்களுடைய 15 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரால் 20 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
“ஐ.நா மனித உரிமை பேரவையின் காலத்தை நீடிப்பு செய்தமைக்கான அனுமதியைப் பெற்றுக்கொண்டது எதுவுமே இல்லாத இடைக்கால அறிக்கைக்கைக்கு ஆதரவை பெற்றுக்கொள்வது உட்பட ஒட்டுமொத்த தமிழ் மக்களின் உயிர்த் தியாகம், சொத்தழிவு எல்லாவற்றுக்கும் சேர்த்து, இன்று ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் 20 மில்லியன் ரூபாயை இலஞ்சம் கொடுத்து வாங்கவேண்டிய ஒரு நிலைமைக்கு, எங்களுடைய தலைமை எங்களுடைய மக்கள் பிரதிநிதிகளை பிழையாக வழிநடத்துகின்றது.
“மறுபக்கத்தில் பாதுகாப்பு தரப்புக்கு அதிகளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் பாதுகாப்பு தரப்பினரால் கொன்றொழிக்கப்பட்ட உயிரிழப்பு, சொத்தழிவு அல்லது ஏனைய காயப்பட்டவர்கள், விசேடதேவைக்கு உட்பட்டவர்கள், பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்காக, நிதி ஒதுக்கப்படவில்லை” என்றார்.
9 hours ago
29 Aug 2025
29 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
29 Aug 2025
29 Aug 2025