Niroshini / 2021 ஜூன் 13 , பி.ப. 06:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
யாழ்ப்பாணம் - திருநெல்வேலி, பால்பண்ணை அமைந்திருக்கும் ஜே/144 கிராமசேவையாளர் பிரிவில் வசிக்கும் மக்களுக்கு, விரைவில் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினரும், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.
யாழ். மாவட்ட மக்களுக்கு 50,000 தடுப்பூசிகள் அண்மையில் வழங்கப்பட்டபோதும், அதிகளவு தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட பால்பண்ணைக் கிராமத்துக்கு தடுப்பூசி வழங்கப்படாதமை குறித்து, அந்தக் கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது குறித்து அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். இதையடுத்தே, அமைச்சர் இவ்வாறு உறுதியளித்தார்.
யாழ். மாவட்டத்துக்கு அடுத்த தொகுதி தடுப்பூசிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், அதன்போது பால்பண்ணை கிராமத்துக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்றும், அமைசச்ர் உறுதியளித்தார்.
2 hours ago
23 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
23 Dec 2025