2025 மே 05, திங்கட்கிழமை

’பி.சி.ஆர் இயந்திரத்தை பெற்றுக்கொள்ள முயற்சி’

Niroshini   / 2021 மே 30 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

யாழில் பெறப்படும் பி.சி.ஆர் மாதிரிகளின் முடிகளைப் பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதாகத் தெரிவித்த யாழ். மாநகர சபை மேயர் விஷ்வலிங்கம் மணிவண்ணன், அதனால், மாநகர சபைக்கு  பி.சி.ஆர் இயந்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளளதாகவும் கூறினார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர். யாழில் ஏறத்தாழ 3000 பி.சி.ஆர் மாதிரிகள் ஒவ்வொருநாளும் சேகரிக்கப்பட்டு அவை, யாழ் போதனா வைத்தியசாலையிலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திலும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆனால் மருத்துவ பீடத்தில் பி.சி.ஆர் பரிசோதனை இடம்பெறாமல் செயலிழந்ததாக செய்திகள் வெளியாகின என்றார்.

'இதையடுத்து. அங்கு பெறப்பட்ட பி.சி.ஆர் மாதிரிகள் தென்னிலங்கைக்கு அனுப்பப்பட்டு அங்கு பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் பெறப்படுகின்றது. இது தேவையற்ற கால தாமதத்தை ஏற்படுத்துகிறது.

'இதனால் யாழ். மாநகர சபை பி.சி.ஆர் இயந்திரத்தை பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது' எனவும், அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X