Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Niroshini / 2020 டிசெம்பர் 14 , பி.ப. 02:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து செல்வதனால், பி.சி.ஆர். பரிசோதனைகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக, யாழ்.மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார்.
யாழ்.மாவட்டச் செயலகத்தில், இன்று(14) நடைபெற்ற உடகவியலாளர் சந்திப்பின் பொதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், மருதனார்மட சந்தை பகுதியில், இதுவரையில் 32 பேர் தொற்றுக்கு இலக்காகியுள்ளனரெனவும் அவர்கள் ஊடாக யாழின் ஏனைய பகுதிகளுக்கும் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகப்படுவதனால், பி.சி.ஆர். பரிசோதனைகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.
அதேவேளை கல்வி நடவடிக்கைகளை பொறுத்த வரைக்கும், உடுவில் மற்றும் தெல்லிப்பளை கோட்டங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளை தற்போது மூடியுள்ளதாகத் தெரிவித்த அவர், அது தொடர்பில் சுகாதார பிரிவினரும் கல்வி பிரிவினரும் கலந்துரையாடி, ஏனைய நடவடிக்கைகளை மேற்கொண்டு, மீண்டும் பாடசாலைகளை திறப்பது தொடர்பில் பரிசீலனை செய்வார்களெனவும் கூறினார்.
மேலும், தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில், இதுவரை சுற்று நிரூபங்கள் எவையும் தமக்கு கிடைக்கப்பெறவில்வையெனவும் அது கிடைத்ததும் அந்த அந்தப் பகுதிக்கான பிரதேச செயலhளர்கள் அதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பார்களெனவும், அவர் தெரிவித்தார்.
அதேவேளை யாழில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் கடந்த தினங்களில் குழப்பம் நிலவியமை தொடர்பில் கருத்துரைத்த மாவட்டச் செயலாளர், கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்க கூடியவர்கள் சுகாதார திணைக்களத்தினர் எனவும் அவர்களது முடிவே உத்தியோக பூர்வமானது, அவர்களால் அனுப்பப்படும் முடிவுகளின் அடிப்படையிலையே கோவிட் - 19 செயலணி முடிவுகளை எடுப்பார்களெனவும் கூறினார்.
'அது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை அறிவிப்பார்கள். ஏனையவர்கள் தெரிவிக்கும் கருத்துகள் உத்தியோகபூர்வமற்றவை. யாழில்.கடந்த சில தினங்கள் கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தரவுகளில் குழப்பம் ஏற்பட்டமை தொடர்பில் விசாரிக்கப்படும்' எனவும், அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
24 minute ago
2 hours ago
2 hours ago