2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

’பியர் பாவனை குறைந்தது’

Editorial   / 2020 ஓகஸ்ட் 24 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

யாழ்ப்பாணத்தில்,  பியர் பாவனை இவ்வருடம் குறைவடைந்துள்ளதாக, யாழ்ப்பாணம் மதுவரி திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணம் மதுவரித் திணைக்களத்தின் ஆளுகைக்குட்பட்ட யாழ்ப்பாணம், நல்லூர், வேலணை ஆகிய பகுதிகளில், 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, இவ்வருடம் கடந்த ஆறு மாதங்கள் வரையிலான புள்ளிவிவரங்களின் படி, பியர் நுகர்வு  27 சதவீதமாக குறைவடைந்துள்ளதாகவும், யாழ்ப்பாண மதுவரி திணைக்களம் மேலும் கூறியுள்ளது.

2019ஆம் ஆண்டு 21 இலட்சத்துக்கு மேற்பட்ட லீற்றர் பியர் விற்பனை இடம்பெற்றதாகவும் எனினும், இவ்வருடம் கடந்த ஆறு மாத புள்ளிவிவரங்களின் படி  7 இலட்சத்து 42 ஆயிரம் லீற்றர் பியர் நுகர்வு மட்டுமே இடம்பெற்றுள்ளதாகவும், யாழ்ப்பாணம் மதுவரி திணைக்கள புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், வைன் நுகர்வு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது,  21%த்தால் குறைவடைந்துள்ளதோடு, அதேபோல் வெளிநாட்டு சாராய நுகர்வும் 1.74 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது. உள்ளூர் சாராய பாவனை 2.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. 

மேலும் யாழ்ப்பாணம், நல்லூர், வேலணை ஆகிய பகுதிகளில் யாழ்ப்பாணம் மதுவரித் திணைக்களத்தின் ஆளுகையின் கீழ் 13 சில்லறை மதுபான விற்பனை நிலையங்களும் 5 ஹோட்டல் விற்பனை நிலையங்களும் 6 ரெஸ்டூரண்ட் விற்பனை நிலையங்களும் காணப்படுகின்றன.

எனினும், கடந்த வருடத்தோடு ஒப்பிடும் போது, இவ்வருடத்தில் கடந்த ஆறு மாதங்கள் வரையிலான புள்ளிவிவரங்களின் படி, பியர்  பாவனை குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X