Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 12 , பி.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
வலிகாமம் தெற்குப் பிரதேச சபை உறுப்பினர் ஜீ.பிரகாசின் உள்ளூராட்சி உறுப்புரிமையை நீக்குவதற்கு, யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம், நேற்று (11), இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்தது.
வலிகாமம் தெற்குப் பிரதேச சபை உறுப்பினர் ஜீ.பிரகாஸ், கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி நடந்து கொண்டார் எனவும் கட்சியின் அறிவுறுத்தலை மீறி தவிசாளர் பதவிக்குப் போட்டியிட்டார் எனவும் குற்றஞ்சாட்டப்பட்டது.
இதையடுத்து, இது குறித்து தமிழரசுக் கட்சியால் அவரிடம் விளக்கம் கோரப்பட்டதுடன், அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.
இந்நிலையில், கட்சியால் கோரப்பட்ட விளக்கத்துக்கு அவர், உரிய முறையில் விளக்கம் கொடுக்காததால், கட்சியின் உறுப்புரிமையில் இருந்து கடந்த வாரம் நீக்கப்பட்டார்.
அது தொடர்பான கடிதம், கட்சியின் செயலாளரால் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், தேர்தல்கள் ஆணையகத்தால், உள்ளூராட்சி அவருடைய உறுப்புரிமை நீக்கப்படுவதாக, அவருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
இதையடுத்து, தன்னை கட்சியில் இருந்து நீக்கியமை மற்றும் உள்ளூராட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்கியமை ஆகியவற்றுக்கு எதிராக, யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில், மனுவொன்றைத் தாக்கல் செய்தார்.
அதில், பிரதிவாதிகளாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, செயலாளர் கி. துரைசிங்கம் மற்றும் பொருளாளர் பொ. கனகசபாபதி ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.
குறித்த வழக்கு நேற்று (11) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, வழக்கு விசாரணையை எதிர்வரும் 25ஆம் திகதி வரை ஒத்திவைத்த நீதிமன்றம், அன்றைய தினம் வரையில், பிரகாசின் உறுப்புரிமை நீக்கப்படுவதற்கு இடைக்கால தடையையும் விதித்து உத்தரவிட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
21 minute ago
58 minute ago
1 hours ago