2025 மே 14, புதன்கிழமை

பிரசாரக் கூட்டங்களுக்குத் தடை: ’இன்னும் முடிவெடுக்கவில்லை’

Editorial   / 2020 மார்ச் 15 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

கொரோனா வைரஸ் தாக்கத்தையடுத்து, நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரக் கூட்டங்களுக்குத் தடைவிதிப்பது தொடர்பில் எந்த முடிவுகளும் இதுவரையில் எடுக்கப்படவில்லையென்று, யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார்.

யாழ். மாவட்டச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் பொதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்துரைத்த அவர், கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனவெனவும் இருப்பினும், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான அரசியல் கட்சிகளின் பிரசாரக் கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்குமாறு அறிவுறுத்துவதா, இல்லையா என்பது தொடர்பில் இதுவரை முடிவு எடுக்கவில்லையெனவும் தெரிவித்தார்.

அரசியல் கட்சிகளின் பிரசார கூட்டங்களுக்கு, உள்ளூரைச் சேர்ந்தவர்கள்தான் கலந்து கொள்வார்களெனவும் அதனால் பெரிதளவில் பிரச்சினைகள் எதுவும் ஏற்படப்போவதில்லையெனவும், அவர் கூறினார்..

“இருப்பினும் திருவிழா, ஏனைய விழாக்கள் நடத்தப்படும் போது, அதில் கலந்துகொள்வதற்கு வெளியிடங்களில் இருந்து பக்தர்கள், வியாபாரிகள் வருகைதருவார்கள். இதனால் அவ்வாறான நிகழ்வுகளை தவிர்த்துக் கொள்வது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

குறிப்பாக பண்டித்தளச்சி அம்மன் கோவில்ன் திருவிழா நடைபெறவுள்ளது. இது தொடர்பில் ஓரிரு நாள்களில் முடிவுகள் எடுக்கப்படும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X