Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம். றொசாந்த் / 2018 பெப்ரவரி 04 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் றக்கா வீதி மருதடிப் பிரதேசத்தில் நேற்று (03) மாலை நடைபெற்ற தமிழ்த் தேசியப் பேரவையின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் மீது குழப்பம் விளைவிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் நேற்று (03) மாலை, மக்கள் கலந்துரையாடல் ஒன்றுக்கு ஏற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது, தாம் ஈபிடிபியினர் என கூறியவாறு ஈபிடிபியின் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்த சில இளைஞர்கள், இப்பகுதியில் வேறு கட்சிகள் கூட்டங்களை நடத்த அனுமதிக்கப்போவதில்லை எனக் கூறியவாறு அங்கிருந்த ஒலி மற்றும் ஒளி சாதனங்களின் வயர்களை அறுத்து அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கலந்துரையாடலுக்காக மக்கள் கூடியபோது, அங்கிருந்து குறித்த தரப்பினர் நழுவிச் சென்றுள்ளனர்.
அதன் பின்னர் கலந்துரையாடல் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது, திடீரென அவ்விடத்துக்கு வந்த சிலர், இது ஈபிடிபியின் இடம், இங்கு பிரச்சாரத்தில் ஈடுபட எவருக்கும் அனுமதி இல்லை எனக் கூச்சலிட்டவாறு கலந்துரையாடல் நடைபெற்ற இடத்தை நோக்கி கற்களை வீசி தாக்குதல் மேற்கொண்டுவிட்டுச் சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
20 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
7 hours ago