Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஓகஸ்ட் 30 , மு.ப. 06:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
இலங்கைப் பிரச்சினையை, பிரித்தானிய அரசாங்கம் தீர்த்து வைக்க வேண்டுமென, பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டொரிஸ், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனை கிளிநொச்சியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில், நேற்று (29) சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதன்போதே மேற்கண்டவாறு வலியுறுத்தியதாக அவர் தெரிவித்தார். இந்தச் சந்திப்பு தொடர்பில், சிறிதரன் எம்.பி மேலும் தெரிவிக்கையில்,
“தற்போதுள்ள நிலைமைகள் தொடர்பாக உயர்ஸ்தானிகர் கேட்டறிந்துகொண்டார். கடந்த ஆட்சி மட்டுமல்லாது, நல்லாட்சியிலும் தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற போதும், அவர்களுக்கு எவ்வித பதில்களும் வழங்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டினேன்.
மக்களுடைய காணிகள் இதுவரை முழுமையாக விடுவிக்கப்படவில்லை என்றும் எடுத்தியம்பினேன்.
முன்னாள் போராளிகள் இலக்கு வைக்கப்படுகின்றனர். அவர்கள், புனர்வாழ்வுக்கு பின்னர் சமூகத்துடன் இணைக்கப்பட்ட பின்பும் அவர்கள் மீதான இலக்கு, நல்லாட்சிக்கான அறிகுறியாகத் தென்படவில்லை. இதனால், அவர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர் என்பன தொடர்பிலும் எடுத்தியம்பினேன்.
பட்டதாரிகளுக்கு உரிய வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படாமையால், அவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று சுட்டிக்காட்டியதுடன், வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டி முறையிலான தீர்வையே மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்பதை வலியுறுத்தினேன்” என்றார்.
2 hours ago
2 hours ago
19 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
19 Jul 2025