Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2017 ஒக்டோபர் 31 , பி.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
கள் இறக்கப்படுவதற்கு, அரசாங்கத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற செய்தி தொடர்பாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நிதியமைச்சர் மங்கள சமரவீர ஆகியோருடன், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா, கலந்துரையாடியுள்ளாரெனத் தெரிவிக்கப்படுகின்றது.
கட்சியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில், இச்செய்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த இணையத்தள செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ,
“குறித்த விடயம் தொடர்பான கலந்துரையாடல், கொழும்பில் பிரதமருடனும் நிதி அமைச்சருடனும், நேற்று (30) இடம்பெற்றது. இதன்போது வடக்கு - கிழக்கு பகுதியில் வாழும் குறித்த தொழிலாளர்கள், அரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ள தொழில் நடவடிக்கையால், அதனை நம்பி வாழும் குடும்பங்கள் தற்போது அச்சமடைந்துள்ளன.
“வடக்கில், குறித்த தொழில் தடை, நடைமுறைக்கு வருமாயின், அதனை நம்பி வாழும் 12 ஆயிரம் குடும்பங்கள், பேரவலத்தைச் சந்திக்கவேண்டிய துர்ப்பாக்கியத்துக்கு உள்ளாகவேண்டிய நிலை ஏற்படும்.
“எனவே, இவ்விடயத்தில் உரிய கவனம் செலுத்தி, குறித்த சாதகமான முறையில் பரிசீலிக்க வேண்டும் என்றும் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.
“இதனிடையே, அரசாங்கத்தின் இந்த அறிவிப்புத் தொடர்பாக குறித்த தொழிற்றுறைசார்ந்த வல்லுநர்கள், கவலை அடையவோ, அச்சமடையவோ தேவையில்லை” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
06 Jul 2025