Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2021 டிசெம்பர் 01 , பி.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம், வலி. கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் சுப்பிரமணியம் சிவபாலன், சாவகச்சேரி, தனங்களப்பு பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் இருந்து இன்று (01) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
புத்தூர் வடக்கு , ஆவரங்கால் பகுதியை சேர்ந்த இவர், தனங்களப்பு பகுதியில் தென்னம் தோட்டம் ஒன்றைப் பராமரித்து வருவதுடன், தோட்டத்துடன் இணைந்த வீட்டில் வசித்தும் வந்துள்ளார்.
கடந்த சில நாள்களாக அங்கு அவரின் நடமாட்டத்தை அயலவர்கள் அவதானித்தும் இருந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்றைய தினம் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து , வீட்டுக்குள் சென்று பார்த்த போது, அவர் உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
இவர், சில நாள்களுக்கு முன்னரே உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .