2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

பிரதேச செயலரின் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 01 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் , என்.ராஜ்

வேலணை பிரதேச செயலர் எஸ்.சோதிநாதனின் இடமாற்றத்துக்கும் புதிய செயலாளர் கடமைகளைப் பொறுப்பேற்கும் எதிர்ப்புத் தெரிவித்து, பிரதேச செயலக வாயிலை மூடி, இன்று (01) பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்வோம் என பொலிஸார் எச்சரித்ததால் அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டது.

வேலணை பிரதேச செயலாளர் எஸ்.சோதிநாதனுக்கு இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில், வவுனியா வெண்கலச் செட்டிக்குளம் பிரதேச செயலாளராக இடமாற்றம் வழங்கப்பட்டது.

அத்துடன், வவுனியா வெங்கலச் செட்டிக்குளம் பிரதேச செயலாளர், எஸ்.சிவகரன், வேலணை பிரதேச செயலாளராக மாற்றப்பட்டார்.

இந்த நிலையில், புதிய பிரதேச செயலாளர் இன்று (01) காலை கடமைகளைப் பொறுப்பேற்கவிருந்த நிலையில் பிரதேச மக்கள் பிரதசே செயலக வாயிலை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனை அறிந்த பொலிஸார், முற்பகல் 10 மணியளவில் பஸ் ஒன்றில் வந்து இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரை கைது செய்வோம் எனவும் கலைந்து செல்லுமாறும் எச்சரித்தனர். 

அதனால் அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டதுடன், புதிய பிரதேச செயலாளரை கடமையேற்கவைக்கும் நடவடிக்கைகளும் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X