2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

பிரபாகரன் யார்: கேட்பர் என்கிறார் சி.வி.கே

Editorial   / 2023 நவம்பர் 22 , பி.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 பு.கஜிந்தன்

இன்னும் பத்து வருடங்களில் பிரபாகரன் யார்? என கேட்கக்கூடிய நிலைமைதான் இங்கு காணப்படுகின்றது என வடக்கு மாகாண சபையின் அவை தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

தமிழ் தேசிய பசுமை இயக்கத்தினால் மரநடுகை மாதத்தை முன்னிட்டு நடாத்தப்படும் கார்த்திகை வாசம் மலர் கண்காட்சி ஆரம்ப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இன்னும் பத்து வருடங்களில் தேசிய தலைவர் பிரபாகரன் யார்? என கேட்கக்கூடிய நிலைமைதான் இங்கு காணப்படுகின்றது. எங்கள் மக்களிடத்தில்  மறதி என்கின்ற பண்பு வளர்ந்து வருகின்றது. இதன் காரணமாக மக்கள் பழைய விடயங்களை மறக்கின்ற நிலைமை காணப்படுகின்றது.

ஐங்கரநேசன் என்பவர் ஒரு தமிழ்த்தேசிய உணர்வோடு நீண்ட காலமாக பயணித்து வருபவர். அவரினால் இந்த மர நடுகை மாதம் ஆண்டுதோறும் சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றது.

மாகாண சபை செயற்பாட்டில் இருந்தபோது  ஐங்கரநேசன் விவசாய அமைச்சராக இருந்தபோது இந்த கார்த்திகை மாதத்தினை மர நடுகை மாதமாக பிரகடனப்படுத்தி  தீர்மானத்தை நிறைவேற்றினோம்.

ஆகவே, எனக்கு அதில் ஒரு  சந்தோஷம் உள்ளது. அதாவது இந்த மரநடுகை மாதத்தை தீர்மானமாக நிறைவேற்றியதில் நானும் பங்காற்றி இருக்கின்றேன்.

முன்னர் வடக்கு மாகாண சபை செயற்பாட்டில் இருந்த காலத்தில் இந்த செயற்றிட்டமானது வட மாகாணத்தில் எல்லா மாவட்டங்களிளும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

ஆனால், தற்பொழுது அந்த நிலை மாறிவிட்டது.  மரநடுகை  தற்பொழுது தமிழ் தேசிய பசுமை இயக்கத்தினால் மாத்திரமே முன்னெடுக்கப்படுகின்றது. அது ஐங்கரநேசனால்  மாத்திரம் முன்னெடுக்கப்படுகின்றது. 

ஐங்கரநேசன் இந்த  மண்ணினுடைய மரநடுகை மைந்தனாக அந்த பெருமையோடு,  இந்த கைங்கரியத்தை முன்னெடுப்பதற்கு இந்த சமூகம் அவரோடு இணைந்து பயணிக்க வேண்டும், ஆதரிக்க வேண்டும். இந்த விடயத்தினை தொடர்ச்சியாக அவர் முன்னெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X