Freelancer / 2022 ஏப்ரல் 26 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் - அராலி, வல்லை வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் உயிரிழந்துள்ளார்.
குறித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானது.
அதில் பயணிந்த யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் பகுதியை சேர்ந்த குணசேகரன் நிக்சன் (வயது 22) எனும் இளைஞன் உயிரிழந்துள்ளார்.
அவருடன் பயணித்த ரவிகரன் கனிஸ்டன் (வயது 20) என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த இளைஞனின் பிறந்தநாள் நேற்றைய தினமாகும்.
இருவரும் மோட்டார் சைக்கிளில் அராலி - வல்லை வீதியில் பயணித்த வேளை , தெல்லிப்பழை அம்பனை சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாக இருந்த வேலி தூணுடன் மோதி விபத்துக்குள்ளானது.
சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். (R)
6 minute ago
26 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
26 minute ago
31 minute ago