Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஒக்டோபர் 14 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
புகையிரதத்தில் ஏற முற்பட்ட போது தவறி தண்டவாளத்தில் விழுந்து, காயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சங்கத்தானை, சாவகச்சேரியை சேர்ந்த 3 பெண் பிள்ளைகளின் தந்தையான மாணிக்கம் விஜயரட்ணம் (வயது-69) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த 8 ஆம் திகதி இரவு 07.30 மணிக்கு தச்சன்தோப்பு புகையிரத நிலையத்தில் இருந்து புகையிரதத்தில் ஏறிய போது தவறி தண்டவாளத்தில் விழுந்துள்ளார்.
இதையடுத்து அவர் உடனடியாக சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (12) பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டு பிரதேப் பரிசோதனைக்கு உத்தரவிட்டார். R
8 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago