Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Editorial / 2020 ஜூலை 22 , பி.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
யாழ்ப்பாணம் - இளவாலை புனித யாகப்பர் தேவாலயத்தில், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட திருப்பீடத்தின் திறப்பு விழா, வெள்ளிக்கிழமை (24) காலை 6.30 மணிக்குத் திறந்து வைக்கப்படவுள்ளது.
இளவாலை மறைக்கோட்ட முதல்வரும் பங்குத் தந்தையுமான அருட்பணி ம. யேசுரட்ணம் அடிகள் தலைமையில் நடைபெறும் இந்தத் திறப்பு விழா நிகழ்வில், யாழ். மறைமாவட்ட ஆயர் மேதகு ஜஸ்ரின் பேர்னாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை பங்கேற்று புதிதாக அமைக்கப்பட்ட திருப்பீடப் பகுதியை ஆசீர்வதித்து திறந்து வைக்கவுள்ளார்.
சுகாதார நடைமுறைகளுக்கு உட்பட்டு நடைபெறும் இந்தத் திறப்பு விழா நிகழ்வில், அருட்தந்தையர்கள், பங்கு மக்கள் பங்கேற்கவுள்ளனர்.
திருப்பீடத்தின் கட்டுமாணப் பணி கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு தற்போது முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago