2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

புதுடெல்லிக்கு மாகாண சபை உறுப்பினர்கள்

Editorial   / 2017 செப்டெம்பர் 28 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

வட மாகாண சபை உறுப்பினர்கள் 16 பேர், இந்தியத் தலைநகர் புதுடெல்லிக்கு அடுத்த மாதம் எட்டாம் திகதி செல்லவுள்ளனர் என வட மாகாண அவைத்தலைவர் சி.வீ.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். வட மாகாண சபையின் 106ஆவது அமர்வு, கைதடியில் அமைந்துள்ள பேரவை செயலகத்தில் இன்று (28) இடம்பெற்றது. அமர்வின் போதே அவைத்தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புதுடெல்யில், அடுத்த மாதம் எட்டாம் திகதி இடம்பெறவுள்ள கருத்தரங்கொன்றுக்காகவே, மாகாண சபை உறுப்பினர்களான, த. குருகுலராஜா, திருமதி அனந்தி சசிதரன், பா. டெனிஸ்வரன், ப. சத்தியலிங்கம், சி. தவராஜா, அ. பரஞ்சோதி, இ. ஆனோல்ட், க. சிவநேசன், சுப்ரமணியம் பசுபதிப்பிள்ளை, பி. சிராய்வா, அ. அஸ்மின், றி. பதியுதீன், கந்தர் தாமோதரம்பிள்ளை லிங்கநாதன், து. ரவிகரன், க. தர்மலிங்கம், சி. அகிலதாஸ் ஆகியோர் செல்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .