2025 மே 17, சனிக்கிழமை

புனரமைப்பு பணிகளை பார்வையிட்ட பிரதமர்

Editorial   / 2019 ஓகஸ்ட் 16 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்ற யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையப் புனரமைப்பு பணிகளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சென்று பார்வையிட்டுள்ளார்.

வடக்குக்கு மூன்று நாள்கள் விஜயம் மேற்கொண்டு, யாழ்ப்பாணம் வந்துள்ள பிரதமர் பல இடங்களுக்கும் சென்று பல்வேறு அபிவிருத்திப் பணிகளையும் ஆரம்பித்து வைத்தார். 

இதன் தொடராக அவரது விடயத்தின் மூன்றாம் நாளான இன்றுக் காலை, யாழ். பொது நூலகத்துக்கு அருகில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் புனரமைக்கப்பட்டு வரும் கலால் மத்திய நிலையத்துக்குச் சென்றுள்ளார்.

இதன் போது, புனரமைப்பு பணிகளை பார்வையிட்டு, அவை தொடர்பில் ஆராய்ந்துள்ளார். மேலும்,  புனரமைப்பு பணிகள் தொடர்பாக இந்திய தூதுவராலய அதிகாரிகள், புனரமைப்பு பணிகளை மேற்கொளகின்ற தரப்புகளுடனும் கலந்துரையாடியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .