Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 ஜூலை 05 , மு.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.நிதர்ஷன்
“தமிழீழ விடுதலைப் புலிகளின் கால்களைப் பிடித்து, உயிர்ப்பிச்சை கேட்டு, அவர்களின் தயவால் அரசியலுக்கு வந்தவரே, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்” என, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தில், நேற்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழீழ விடுதலைப் புலிகளின் கால்களைப் பிடித்து, இனிமேலும் துரோகம் செய்யமாட்டேன். துரோகியாக சாவதற்கு விரும்பவில்லை எனக் கெஞ்சிக் கூத்தாடி, புலிகளின் தயவால் தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தேர்தலில் தோற்றவர்கள் என எங்களைச் சுட்டி, திரும்பத் திரும்பக் கூறுவது வேடிக்கையான ஒன்று.
1977ஆம் ஆண்டு தேர்தலில் மட்டுமே இரா.சம்பந்தன் வெற்றியடைந்தார். பின்னர் நடைபெற்ற தேர்தல்களில், அவர் வெற்றியடையவில்லை. அதன்பின்னர், 2000ஆம் ஆண்டு காலப் பகுதியில், இலண்டனுக்குச் சென்று, அங்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கத்தைச் சந்தித்து, அவரின் காலில் விழுந்து, “இனித் துரோகம் செய்யமாட்டேன் சாகும்போது துரோகியாகச் சாக விரும்பவில்லை” என கெஞ்சினார்.
அன்டன் பாலசிங்கம், தான் மட்டும் தீர்மானிக்க இயலாது, புலிகளிடம் செல்லுங்கள் எனக் கூறியதன் பின்னர், மீண்டும் திருகோணமலைக்கு வந்து, தமிழீழ விடுதலைப் போராளி ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் ஏறி புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்று அங்கு புலிகளைச் சந்தித்தார். அங்கு, தளபதி சொர்ணத்தின் காலில் விழுந்து கெஞ்சிய பின்னர், புலிகள், சம்பந்தனுக்கு புனர்வாழ்வு கொடுத்தனர். தேர்தலில், புலிகளின் தயவில்தான் வெற்றியடைந்தார். முடிந்தால் சம்பந்தன் சொல்வதைப் போன்றே, புலிகளைப் பயங்கரவாதி எனக் கூறிக்கொண்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும், மக்கள் மத்தியில் சென்று தேர்தலில் வெற்றியடைந்து காட்டட்டும் பார்க்கலாம்” என்றார்.
7 hours ago
8 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
9 hours ago
9 hours ago