2025 மே 02, வெள்ளிக்கிழமை

பூஜையில் வைத்த பணம் மாயம்

Freelancer   / 2022 ஜூலை 17 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

யாழ்ப்பாணம் - கோட்டை முனியப்பர் ஆலயத்தில் தொழிலில் முதலீடு செய்வதற்காக நேற்றைய தினம் பூஜையில் வைத்து எடுத்த 10 இலட்சம் ரூபாய் பணத்தினை இருவர் கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர். 

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தான் புதிதாக தொடங்கவிருந்த தொழில் முயற்சிக்கு முதலீடு செய்வதற்கான 10 இலட்சம் ரூபாய் பணத்தினை முனியப்பர் ஆலயத்தில் பூஜையில் வைத்து எடுத்து தருமாறு பூசகரிடம் கொடுத்துள்ளார். 

பின்னர், பூஜையில் வைத்து எடுத்த பணத்தினை ஆலயத்திற்கு வெளியில் கொண்டு வருவதற்கு இடையில் அங்கு நின்றிருந்த இருவர் அப்பணத்தினை பறித்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .