2025 மே 01, வியாழக்கிழமை

‘பூநகரி கல்விக் கோட்டத்தை மாற்றுக’

Princiya Dixci   / 2021 மார்ச் 07 , பி.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்ரமணியம் பாஸ்கரன் 

கிளிநொச்சி, புநகரி நல்லூர் மகா வித்தியாலயத்தில் தற்போது இயங்கி வருகின்ற பூநகரி கல்விக் கோட்டத்தை, பூநகரி மத்தியக் கல்லூரிக்கு அண்மித்த பகுதியில் அல்லது புநகரி மத்திய கல்லுாரியில் இயங்க வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பூநகரி அபிவிருத்தி நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

கிளிநொச்சி கல்வி வலயத்துக்குட்பட்ட பூநகரி கோட்டக் கல்வி அலுவலகம்,  தற்போது பூநகரி பரந்தன் வீதியில் பரந்தன் பகுதிக்கு அண்மித்த பகுதியிலுள்ள நல்லூர் மகா வித்தியாலயத்தில் இயங்கி வருகின்றது. 

வேரவில் இந்து மகா வித்தியாலயம், முழங்காவில் பல்லவராயன்கட்டு உள்ளிட்ட பாடசாலைகள், கோட்ட கல்வி அலுவலகத்தின் தேவைகளுக்கு  நல்லூர் மகாவித்தியாலயத்துக்கே வர வேண்டியத் தேவை காணப்படுகின்றது.

மேற்படி பாடசாலைகளிலிருந்து, கோட்டக் கல்வி அலுவலகத்தில் தேவை கருதி வருகின்ற அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பெரும் போக்குவரத்து வசதிகள் இல்லாத பிரதேசங்களிலிருந்து, பூநகரி வாடிக்கு வந்து, அதிலிருந்து பரந்தன் வீதியூடாகச் சென்று தமது தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய நிலை காணப்படுகின்றது.

எனவே, போக்குவரத்துச் சேவைகளை பெற்றுக் கொள்ளக்கூடிய ஏ32 வீதியில் அமைந்துள்ள பூநகரி மத்தியக் கல்லூரி அல்லது அதை அண்மித்த பகுதிகளில் கோட்ட கல்வி அலுவலகத்தை இயங்க  வைப்பதன் மூலம், சேவைகளை இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .