2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

பூநகரியில் மரக்குற்றிகள் கைப்பற்று

Editorial   / 2020 ஓகஸ்ட் 06 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்ச்செல்வன் 

கிளிநொச்சி, பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரசபுரம் காட்டில் இருந்து  சிறிய லொறியொன்றில் சட்டவிரோதமாக யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகை மரக்குற்றிகளை, வில்லடி பகுதியில் வைத்து, பூநகரி பொலிஸார், இன்று (06) கைப்பற்றியுள்ளனர்.

பூநகரி பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே, குறித்த மரக்குற்றிகள், பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன மரக்குற்றிகளின் பெறுமதி, சுமார் 08 இலட்சம் ரூபாய் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

லொறியின் சாரதி தப்பிச் சென்றுள்ள நிலையில், அடையாளம் காணப்பட்டுள்ளாரெனத் தெரிவித்த பூநகரி பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X