2025 மே 03, சனிக்கிழமை

பூப்புனித நீராட்டு விழாவில் கலந்துகொண்டோர் தனிமையில்

Niroshini   / 2021 நவம்பர் 04 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் - கொடிகாமம் பகுதியில், தனது பேத்தியின் பூப்புனித நீராட்டு விழாவில் கலந்துகொண்ட மூதாட்டி, கொரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில், குறித்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொடிகாமம் பகுதியில், கடந்த சில தினங்களுக்கு முன்னர், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவர், தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், அவருக்கு கொரோனா  கண்டறியப்பட்டதை தொடர்ந்து, அவர் உயிரிழந்தார்.

குறித்த மூதாட்டியின் வீட்டில், அவரது பேத்திக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர், பூப்புனித நீராட்டு விழா நடைபெற்றது.

குறித்த மூதாட்டி கொரோனா தொற்றால் உயிரிழந்தமையால், அந்த நிகழ்வில் கலந்துகொண்டவர்களை அடையாளம் கண்டு, அவர்களை சுகாதாரப் பிரிவினர் தனிமைப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

         

         


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X