2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

பூம்புகார் கடற்கரையில் சடலம் மீட்பு

Editorial   / 2020 ஜூன் 03 , பி.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.விஜித்தா

 

யாழ்ப்பாணம் – பாசையூர், பூம்புகார் கடற்கரையில் இருந்து, இன்று (03) இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், பாசையூர் பகுதியைச் சேர்ந்த சில்வெஸ்டர் சஜித் (27) என அடையாளங் காணப்பட்டுள்ளார்.

கடற்றொழிலாளர்கள் நான்கு பேர், இன்று (03) அதிகாலை பூம்புகார் கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இதன்போது, இந்த இளைஞரை, ஓர் இடத்தில் நிறுத்திவிட்டு ஏனைய மீனவர்கள் மற்றோர் இடத்தில் தொழில் பார்க்கச் சென்று, திரும்பி வந்து பார்த்த போது, அவர் காணாமல் போயிருந்தார்.

பின்னர், சக மீனவர்கள் சேர்ந்து, அந்த இளைஞனைத் தேடிய போது, அவ்விளைஞனின் சடலம் பூம்புகார் கடற்பகுதியில் கரையொதுங்கியது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X