Editorial / 2020 ஜூலை 27 , பி.ப. 01:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
பாரவூர்தியில் பெக்கோ வாகனத்தை ஏற்றும் போது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த பெக்கோ வாகன சாரதி, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த 20 நாள்களாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார்.
ஊர்காவற்றுறை - சுருவில் பகுதியைச் சேர்ந்த செல்வபெருமாள் பிரதீசன் (வயது 30) என்பவரே, இவ்வாறு உயிரிழந்தவராவார்.
ஜூலை 6ஆம் திகதியன்று, இந்நபர், பெக்கோ வாகனத்தை பாரவூர்தியில் ஏற்றி பிறிதோர் இடத்துக்கு எடுத்து செல்ல முற்பட்டுள்ளார். இதன் போது தெல்லிப்பளை பகுதியில் வைத்து பெக்கோ வாகனத்தை பாரவூர்தியில் ஏற்றும் போது பெக்கோ வாகனம் சரிந்துள்ளது.
இதனால் செயினுக்குள் அகப்பட்டு கொண்ட அந்நபர், காயங்களுக்குள்ளாகி தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
49 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
58 minute ago
1 hours ago