2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

பெட்ரோல் பெற காத்திருந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

Princiya Dixci   / 2022 ஓகஸ்ட் 11 , பி.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று (10)  பெட்ரோல் பெற காத்திருந்தவர் திடீரென மயங்கி சரிந்து உயிரிழந்துள்ளார்.

புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த சிவசோதிலிங்கம் சொரூபன் (வயது 38) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர், தனது மோட்டார் சைக்கிளுக்கான பெட்ரோலை பெற்றுக்கொள்ள தனது QR குறியீட்டை காண்பித்த நிலையில் மயங்கி, மோட்டார் சைக்கிளுடன் சரிந்து விழுந்துள்ளார்.

அதனை அடுத்து அங்கிருந்தவர்கள் அவரை வைத்தியசாலையில் அனுமதித்த போதும், அவர் உயிரிழந்துள்ளார்.

ஆரம்ப கட்ட வைத்திய பரிசோதனைகளின் அடிப்படையில் மாரடைப்பே உயிரிழப்புக்கு காரணம் என அறிக்கையிடப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X