Janu / 2023 ஒக்டோபர் 16 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் – நாவற்குழி பகுதியில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமொன்று திங்கட்கிழமை (16) மீட்கப்பட்டுள்ளது.
நாவற்குழி ஐயனார் கோயிலடியை சேர்ந்த அஜந்தன் யமுனா (வயது 23 ) எனும் இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குடும்ப தகராறில் பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் கொண்டு விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் குறிப்பிட்ட பெண்ணின் கணவர் யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அண்மையில் முச்சக்கரவண்டியில் தப்பிக்க முற்பட்ட போது பொலிஸாரால் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்ட நிலையில் "தான் மனைவியை தாக்கியதாகவும் உயிரிழந்தது தனக்கு தெரியாது" என சந்தேக நபர் தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
எம்.றொசாந்த் , நிதஷன் வினோத்
55 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
2 hours ago
2 hours ago