2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது கத்திவெட்டு

Editorial   / 2018 பெப்ரவரி 04 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன்

யாழ். புத்தூர்ச் சந்தி பகுதியில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது கத்தி வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நேற்று (03) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது என கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில், பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் முகுந்தன் சர்ஜினி என்ற 26 வயதுடய பெண் பொலிஸ் உத்தியோகத்தரே கையில் காயங்களுக்குள்ளான நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடமைக்குச் சென்று திரும்பும் வழியில், தனது கணவனே தன்னை வெட்டியதாக குறித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் முறைப்பாடு செய்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .