2025 மே 03, சனிக்கிழமை

பெண்களின் கைப்பையுடன் நடமாடிய இளைஞன் கைது

Princiya Dixci   / 2022 செப்டெம்பர் 13 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த், வி.நிதர்ஷன், டி.விஜித்தா, செந்தூரன் பிரதீபன்

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்துக்கு அருகில் பெண்கள் பாவிக்கும் கைப்பையுடன் நடமாடிய இளைஞனிடம் இருந்து சுமார் 20 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகளும், ஹெரோய்ன் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளன.

மாவட்டச் செயலகத்திற்கு அருகாமையில் நேற்று திங்கட்கிழமை (13) மாலை பெண்கள் பாவிக்கும் கைப்பையுடன் (ஹேண்ட்பேக்) சந்தேகத்துக்கு இடமான முறையில் இளைஞன் ஒருவன் நடமாடியுள்ளான்.  

அது தொடர்பில் தகவல் அறிந்த யாழ்ப்பாண பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் சம்பவ இடத்துக்குச் சென்று, சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடிய இளைஞனிடம் விசாரணைகளை முன்னெடுத்து, அவரது உடமைகளை சோதனையிட்டனர்.

அதன்போது, குருநகர் பகுதியை சேர்ந்த இளைஞன் 24 வயதுடையவர் என்றும், இளைஞன் வைத்திருந்த பெண்களின் கைப்பையினுள் சுமார் 08 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருள் மற்றும் சுமார் 20 இலட்ச ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் என்பன காணப்பட்டன என பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து இளைஞனை, யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X