2025 மே 13, செவ்வாய்க்கிழமை

பெண்களை மீறி சாராயப் போத்தல்களுடன் ஒருவர் கைது

Editorial   / 2020 மே 24 , பி.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

அல்லைபிட்டியில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட ஒருவர், அப்பகுதி பெண்களின் எதிர்ப்புக்கு மத்தியில், 28 சாராயப் போத்தல்களுடன், நேற்று (23) பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

அல்லைப்பிட்டி கிராமத்தில் நீண்டகாலமாக பொதுக்கள், பொது அமைப்புகளின் எதிர்ப்புகளை மீறி கள்ளச் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த இந்த நபர் தொடர்பாக, பொதுமக்கள் வழங்கியத் தகவலை அடுத்து, அவரை நேற்று (23), பொலிஸார் கைதுசெய்ய முற்பட்டுள்ளனர்.

இதன்போது, அவ்விடத்தில் உள்ள பெருமளவு பெண்கள் அவரை கைதுசெய்ய விடாமல், எதிர்ப்பு தெரிவித்ததால், உடனடியாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் இருந்து பெருமளவு பொலிஸார் வரவழைக்கப்பட்டு, அந்த நபரை 28 சாராயப் போத்தல்களுடன் கைதுசெய்யப்பட்டார்.

இவருக்கு எதிராக ஊர்காவற்றுறை நீதிமன்றில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டதால், பெருமளவு வழக்குகள் நடைபெற்று வருகின்றன. அதில் வழங்கப்பட்ட தீர்ப்பு ஒன்றில் 5 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X