2025 மே 19, திங்கட்கிழமை

பெற்றோல் குண்டுத் தாக்குதல்

Editorial   / 2018 டிசெம்பர் 08 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். றொசாந்த்

யாழ்ப்பாணம் - கோப்பாய் மத்தி, கல்வியற்கல்லூரி ஒழுங்கையில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில், ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அத்துடன், வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஹைஏஸ் வாகனம், ஓட்டோர், மோட்டார் சைக்கிள் என்பன தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன. 

இந்தச் சம்பவம் நேற்று (07) இரவு 11 மணியளவில் இடம்பெற்றது.

செல்லத்துரை செல்வரஞ்சன் (வயது-53) என்பவரே, இவ்வாறு கையில் எரி காயங்களுக்கு உள்ளாகிய நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் போலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, கடந்த வாரம் யாழ் நகரில் உள்ள கராஜ் உரிமையாளரின் வீடொன்றின் மீது, இதே பாணியில் பெற்றோல் குண்டு வீசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X