2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

பொதுச்சேவை ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள் நியமனம்

Editorial   / 2017 ஓகஸ்ட் 10 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


- கே.மகா, எஸ்.அரசரட்ணம்

வட மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்களை, வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே,  ஆளுநர் செயலகத்தில் இன்று (10) வைத்து வழங்கி வைத்தார்.

வட மாகாண ஆளுநரால் பொதுச்சேவை ஆணைக்குழு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு பின்னர் நடைபெற்ற   நேர்முகத் தேர்வில் தோற்றிய 15 பேரில் 5 பேர் நிர்வாக உறுப்பினர்களாக ஆணைக்குழுவுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஓய்வு பெற்ற யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் செல்லையா பத்மநாதன், வட மத்திய மாகாணத்தின் ஓய்வு நிலைக் கல்விப்பணிப்பாளர் எஸ்.எம்.கலகொட, அரச வர்த்தகக கூட்டுத்தாபனத்தின் ஓய்வு பெற்ற பணிப்பாளர் சம்சுதின் லீலாவுதீன்,  ஓய்வு பெற்ற வட மாகாண பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் நாகமணி இராசநாயகம், ஓய்வு பெற்ற உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கதிரவேலு இராசையா ஆகியோரே பொதுச்சேவை ஆணைக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன், ஆளுநரின் இணைப்புச் செயலர் எச்.சுமணபால, வட மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் எஸ்.மோகன்ராஸ், வட மாகாண நிர்வாகச் செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .