2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

“பொருளாதாரத்தை கட்டியெழுப்ப மத ஒற்றுமை அவசியம்”

Janu   / 2024 ஜனவரி 09 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொருளாதாரத்தை கட்டியெழுப்ப மத ஒற்றுமை அவசியம் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநரின் ஒதுக்கீட்டின் கீழ் மத வழிபாட்டு தலங்களுக்கான  அன்பளிப்புகளைக் கையளிக்கும் நிகழ்வு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸினால் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்றபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந் நிகழ்வில், நல்லூர் வடக்கு சந்திரசேகர பிள்ளையார் கோவில், ஆவரங்கால் சிவன் கோவில், யாழ்ப்பாணம் ஸ்ரீ நாகவிகாரை, இளவாலை புனித பிலிபேரிஸ் தேவாலயம் ஆகியவற்றுக்கான அன்பளிப்பு பொருட்கள் ஆளுநரால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

அன்பளிப்பு பொருட்களை வழங்கிவைத்த ஆளுநர், வருகைதந்த மத குருமார்கள் மற்றும் ஆலய நிருவாகத்தினருடன் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது, மதங்களிடையே பூசல் உருவாக இடமளிக்கக் கூடாது எனவும், பொருளாதாரத்தை கட்டியெழுப்ப மத ஒற்றுமை அவசியம் எனவும் கூறியுள்ளார்.

ஆளுநரின் கருத்துக்களைக் கேட்டறிந்த மத குருமார், மத ஒற்றுமை மற்றும் இனங்களுக்கு இடையிலான ஐக்கியத்தைக் கட்டியெழுப்ப ஆளுநர் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன், இந்த செயற்பாடுகளுக்கு தங்களின் பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X