2025 மே 14, புதன்கிழமை

பொருள்களுக்கு அதிக சந்தை வாய்ப்பை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை

Editorial   / 2020 மார்ச் 17 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

நாட்டின் உள்ளூர் உற்பத்தியை சகல மாவட்டங்களுக்கும் பண்டமாற்று வசதியை ஏற்படுத்தி பொருள்களுக்கு அதிக சந்தை வாய்ப்பை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை,  கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படவுள்ளது.

நாட்டின் உள்ளுர் உற்பத்தி வளத்தை அதிககரிக்கும் நோக்குடன், கூட்டுறவுச் சங்கங்களின் ஊடாக இந்தப் பொருள்களை அதிகமாக சந்தைப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுளள்து.  

நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த உற்பத்தி பொருள்கள் பண்டமாற்றுச் செய்யப்படும். இந்தப் பண்டமாற்று மூலம்  உற்பத்திப் பொருள்களை மக்கள் இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடியும்.

அத்துடன், அனைத்து மாவட்டங்களிலும் உள்ளூர் உற்பத்திப் பொருள்களுக்கு இதன் மூலம் சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கவும் முடியுமென்று, தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X