Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Yuganthini / 2017 ஜூலை 27 , பி.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
“நீ பொலிஸா” என்று கேட்டு, தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக, வரணியில் வைத்துத் தாக்குதலுக்குள்ளான பொலிஸ் உத்தியோத்தரான எஸ். சிந்துராஜ் தெரிவித்தார்.
கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகரான இவர் மீது, இனந்தெரியாத மர்மக்கும்பல் ஒன்று, நேற்று இரவு (26), வரணி வீதி யாக்கரு பகுதியில் வைத்துத் தாக்குதலை மேற்கொண்டது.
இதன்போது படுகாயங்களுக்கு உள்ளான அவர், சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், “நான், வீட்டிலிருந்து கொடிகாமம் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று கொண்டிருந்தேன். இதன்போது முகத்தை மூடிக்கட்டியவாறு சிலர் என்னை மறித்து, ‘நீ பொலிஸா?’ என கேட்டனர். நான் ‘ஆம்’ என்று கூற, கொட்டன்களால் என்னைத் தாக்கினர். அவர்களிடமிருந்து ஒருவாறு தப்பித்து ஓடிய நான், சக பொலிஸாரின் உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டேன்.
“தனிப்பட்ட விரோதிகள் எவரும் எனக்கு இல்லை. என் மீது ஏன் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்று கூட எனக்குத் தெரியாது” எனத் தெரிவித்தார்.
53 minute ago
57 minute ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
57 minute ago
6 hours ago