Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Yuganthini / 2017 ஓகஸ்ட் 01 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
யாழ். மாவட்டத்தில் ஒரே தரத்தில் கடமையாற்றும் இரண்டு தமிழ் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு இடையில், பனிப்போர் இடம்பெற்றுவருவதாகவும், அதன் தொடர்ச்சியாக, பொது இடங்களில் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மனக்கசப்புக் காரணமாகவே, இவ்வாறு இவர்களுக்கிடையில் முரண்பாடும் வாய்த்தர்க்கமும் ஏற்படக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களில் ஒருவர், கோப்பாய் பகுதியில் உள்ள தனியார் தங்குமிடமொன்றில் வாடகைக்குத் தங்கியுள்ளார்.
குறித்த தங்குமிடத்துக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (30) சென்ற மற்றைய அதிகாரி, "எதற்காக அந்த அதிகாரிக்கு வாடகைக்கு இடம் கொடுத்தீர்கள்? மிகவிரைவில் அந்த அதிகாரியை, இந்த இடத்தில் இருந்து அகற்ற வேண்டும்" என, தங்குமிடத்தில் பணியாற்றும் ஊழியர்களை மிரட்டிச் சென்றுள்ளார்.
குறித்த அதிகாரி மிரட்டிச் சென்ற சம்பவம் தொடர்பாக, தங்கியுள்ள அதிகாரி வந்ததும், ஊழியர்கள் முறையிட்டு உள்ளனர். அதற்கு அவர், தான் இந்த மிரட்டல் சம்பவம் தொடர்பில், வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் முறையிடுவதாகவும், ஊழியர்களைப் பயப்பட வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.
இந்த நிலையில், நேற்று (31) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட பொலிஸ்மா அதிபர் தொடர்பிலான செய்தி சேகரிப்புப் பணிக்காக, யாழ். தலைமை பொலிஸ் நிலையத்தில் ஊடகவியலாளர்கள் காத்துக்கொண்டிருந்த வேளையில், ஒரு தமிழ் பொலிஸ் உயர் அதிகாரி, “ஊடகங்கள் தன்னுடைய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், மற்றவர்களின் செய்திகளுக்கு தான் முன்னுரிமை கொடுக்கின்றன. அது ஏன் எனத் தெரியவில்லை” என, ஊடகவியலாளர்களை கடிந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .