Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 நவம்பர் 24 , பி.ப. 01:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.என்.நிபோஜன்
“விடுதலைப்புலிகளின் காலத்தில், பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமான உறவு நெருக்கமாக இருந்தது. இதனால் பிரச்சினைகளை உடனுக்குடன் தெரியப்படுத்தி தீர்வுகளை பெற்றுக்கொள்ள கூடியதாகவும் இருந்தது. ஆனால், தற்போது அந்த உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கு மொழியும் ஒரு தடை” என பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில், மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில், நேற்று நடைபெற்ற மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழு கூட்டத்திலேயே, இவ்வாறுத் தெரிவிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், வட மாகாண சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ரி.கணேசநாதன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் நிலையங்களின் பொறுபதிகாரிகள், சிவில் சமூக பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறுகின்ற குற்றச் செயல்களை கட்டுப்படுத்தல், சட்டம், ஒழுங்கை பேணுதல் போன்ற விடயங்கள் ஆராயப்பட்டன.
இது தொடர்பில் சிவில் சமூக அமைப்புகளின் குறிப்பாக கிராம, மாவட்ட மட்டங்களின் சிவில் பாதுகாப்பு குழுக்களின் பங்களிப்பின் அவசியம் பற்றியும் அவா்களின் ஒத்துழைப்பு குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கு இன்றியமையாத ஒன்றாகும் எனவும் வட மாகாண சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி வலியுறுத்தினார்.
இதன்போது கருத்து தெரிவித்த சிவில் சமூக பிரதிநிதிகள் ,
“விடுதலைப்புலிகளின் காலத்தில் பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் நெருங்கிய உறவு காணப்பட்டது இது குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு பெரும் உதவியாக இருந்தது. ஆனால், தற்போது பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமான உறவில் இடைவெளி காணப்படுகிறது.
அதற்கு மொழியும் ஒரு தடையாக இருக்கிறது. இதனைக் கருத்தில் எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தனர்.
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
9 hours ago