2025 செப்டெம்பர் 01, திங்கட்கிழமை

பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு

Niroshini   / 2022 ஜனவரி 02 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். றொசாந்த்  

இளவாலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  

கீரிமலை, கூவில் வீதியில் உள்ள வாடகை வீட்டில், இன்று (2) காலை, அவர் சடலமாக மீட்கப்பட்டார் என்று, பொலிஸார் தெரிவித்தனர்.  

மட்டக்களப்பைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை ரமணன் (வயது-47) என்ற பொலிஸ் உத்தியோகத்தரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.  

அவரது குடும்பத்தினர் புத்தாண்டை முன்னிட்டு, மட்டக்களப்புக்கு சென்றிருந்த நிலையில், பொலிஸ் உத்தியோகத்தர் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார் என்றும், பொலிஸார் கூறினர்.  

அவரது உயிரிழப்புக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், பொலிஸார் குறிப்பிட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X