2025 மே 06, செவ்வாய்க்கிழமை

பொலிஸ் உத்தியோகஸ்தர் சடலமாக மீட்பு

Niroshini   / 2021 ஜூலை 28 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணப் பொலிஸ் நிலைய பொலிஸ் விடுதியில் இருந்து, இன்று (28) காலை, பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அநுராதபுரத்தைச் சேர்ந்த ஜயசேகர (வயது 45) என்ற பொலிஸ் சார்ஜெண்ட் ஒருவரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று (27) இரவு உறக்கத்துக்கு சென்ற நிலையில், இன்று காலை, கடமைக்கு அழைத்து செல்ல சக உத்தியோகஸ்தர் ஒருவர் அவரை எழுப்ப முயன்ற போது, அவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.

பிரேத பரிசோதனைக்காக சடலம், யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X