Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 ஜனவரி 11 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பொலிஸ் காவலரண் மீது இரு நபர்களால் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடாத்தப்பட்ட சம்பவம் புதன்கிழமை (10) பதிவாகியுள்ளது.
தாக்குதல் மேற்கொண்டு இருவரும் தப்பிச் செல்ல முயன்ற போது பொலிஸார் துரத்தி சென்று அவர்களை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரியவந்துள்ளது.
மண்டைதீவு மற்றும் ஊர்காவற்துறையை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் யாழ்ப்பாணத்தையும் , தீவகத்தையும் இணைக்கும், மண்டைதீவு சந்தியில் பொலிஸ் காவலரண் காணப்படுவதனால் தீவக பகுதிகளில் இருந்து சட்டவிரோத இறைச்சிகள், போதைப் பொருட்கள் என்பவற்றை யாழ்ப்பாணத்திற்கு கடத்தப்படுவது பெருமளவில் கட்டுப்படுத்தப்படிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எம். றொசாந்த்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .