2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

‘ பொலிஸ் சேவையில் இணைந்து சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும்’

எம். றொசாந்த்   / 2017 ஓகஸ்ட் 10 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு மாகாண சபைக்குச் சென்று மாகாண சபைக் கட்டடத் தொகுதியை, கிளிநொச்சி செஞ்சோலை மாணவர்கள் இன்று (10) பார்வையிட்டதுடன் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனையும் சந்தித்துள்ளனர்.

இதன்போது, தமக்கு படிக்க கூடம் இல்லை எனவும் அதனை அமைத்துத் தருமாறும் செஞ்சோலையில் நுளம்புகளின் பெருக்கம் அதிகமாக காணப்படுவதால், அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் முதலமைச்சரிடம் மாணவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதற்குப் பதிலளித்த முதலமைச்சர், இக்கோரிக்கைகளை எழுத்துமூலம் தருமாறும் இவ்விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், தமது கல்வி நடவடிக்கைகள் முடிவடைந்தவுடன் தமக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருமாறு முதலமைச்சரைக் கேட்டனர்.

இதற்குப் பதிலளித்த முதலமைச்சர், “வட மாகாணத்தில் பொலிஸ் சேவைக்கே தற்போது வெற்றிடங்கள் காணப்படுகிறன. எனவே, பொலிஸ் சேவையில் இணைந்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும்” எனக் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .