2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

‘பொலிஸ் வேட்டை தொடரும்’

Editorial   / 2017 நவம்பர் 22 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

யாழ்ப்பாணத்தில் உள்ள கடைசி வாள்வெட்டுக் குழு உறுப்பினரைக் கைது செய்யும் வரை, பொலிஸ் வேட்டை தொடரும்” என, யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ தெரிவித்தார்.  

 இது தொடர்பில் அவர் நேற்று (21) இரவு, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போது கூறியதாவது,

 “வாள் வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் தொடர்பில், கடந்த நாட்களில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது, செவ்வாய்க்கிழமை இரவு வரையில், 100 பேர் கைது செய்யப்பட்டனர்.  

 “அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், பலரை பொலிஸ் பிணையில் செல்ல அனுமதித்துள்ளோம். தேவை ஏற்படின் அவர்களை மீளக் கைதுசெய்து நீதிமன்றங்களில் முற்படுத்த நடவடிக்கை எடுப்போம்.  

 “எமது இலக்கு வாள்வெட்டு குழுக்களேயாகும். அவர்களை நாம் அடையாளம் கண்டுள்ளோம். அவர்களின் விவரங்களைப் பெற்றுள்ளோம். அந்தக் குழுக்களைச் சேர்ந்த கடைசி உறுப்பினரைக் கைது செய்யும் வரையில், எமது தேடுதல் வேட்டை தொடரும். அதனால், மக்கள் வீணாகப் பதற்றமடையவோ, குழம்பவோ தேவையில்லை.  

“இளவாலை, அச்சுவேலி, காங்கேசன்துறை, பலாலி மற்றும் தெல்லிப்பளை ஆகிய பொலிஸ் பிரிவுகளில், வாள்வெட்டுச் சந்தேகநபர்களைத் தேடி, பொலிஸார் செவ்வாய்க்கிழமை சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதன்போது, 10க்கும் மேற்பட்டவர்களை பொலிஸார் கைது செய்தனர். அவர்களில் பலரை விசாரணைகளின் பின்னர் பிணையில் செல்ல அனுமதித்தோம். ஏனையவர்களை, பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றோம். தேவை ஏற்படின், அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுப்போம்” என, அவர் மேலும் தெரிவித்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .