2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

போக்குவரத்து நெருக்கடி ஆராயப்படும்

Editorial   / 2021 டிசெம்பர் 01 , பி.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு மாணவர்களின் போக்குவரத்து நெருக்கடி தொடர்பாக, மாவட்டச் செயலகத்தில் நாளை (02)  நடைபெறவுள்ள போக்குவரத்து துறையினருடனான கலந்துரையாடலில் ஆராயப்பட உள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் க.விமலநாதன் தெரிவித்தார்.   

இது தொடர்பில் இன்று (01) அவர் தெரிவிக்கையில், “மாந்தை கிழக்கில் தனியார் பஸ்ஸில் செல்கின்ற மாணவர்கள், பாடசாலை முடிந்தவுடன் பஸ் அன்மையால் வீடு திரும்ப முடியால் அல்லல்படுகின்றமை தொடர்பாக எனக்கு முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கவில்லை.

“எனினும், ஊடகங்கள் மூலம் இதனை அறிந்து கொண்டேன். எனவே,  இவ்விடயம் தொடர்பாக போக்குவரத்துத் துறையினருடன் நாளை நடைபெறவுள்ள கலந்துரையாடலில் ஆராயப்படும்” என்றார்.

மாந்தை கிழக்கில் இருந்து பல பாடசாலைகளுக்கு காலையில் மாணவர்களை ஏற்றிச் செல்கின்ற தனியார் பஸ்கள் பாடசாலை முடியும் நேரத்தில் சேவையில் ஈடுபடுத்தப்படுவதில்லை. இதனால், தமது பிள்ளைகளை வீடுகளுக்கு அழைத்து வருகின்ற நெருக்கடி தொடர்வதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, பாடசாலை முடியும் வேளையிலும் மாணவர்களை ஏற்றக் கூடிய தனியார்  பஸ்கள் சேவை இடம்பெற வேண்டும் என்பதே பெற்றோர்களின் கோரிக்கையாகும். 

கொரோனா தொற்றுப் பரவில் தொடங்குவதற்கு முன்னர் காலை, மாலை என இரு சந்தரப்பங்களிலும் தனியார் பஸ் சேவைகள் ஈடுபடுத்தப்பட்டமை  குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .