Freelancer / 2022 நவம்பர் 23 , பி.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் - தெல்லிப்பளை பொலிஸாரினால் பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாரின் சோதனை நடவடிக்கைகளின் போது , 19 மற்றும் 22 வயதுடைய இரு இளைஞர்கள் 8 மற்றும் 10 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த போது , தமக்கு, மல்லாகம் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் போதை மாத்திரைகளை விற்பனை செய்தவர் என தெரிவித்துள்ளனர்.
அவர்களின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் மல்லாகம் பகுதிக்கு விரைந்த பொலிஸார் , போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 36 வயதுடைய பெண்ணொருவரை 40 போதை மாத்திரைகளுடன் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். R
6 hours ago
09 May 2026
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
09 May 2026
09 May 2026