2025 மே 02, வெள்ளிக்கிழமை

போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Niroshini   / 2021 டிசெம்பர் 08 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த் 

யாழ்ப்பாணம் - துன்னாலை பகுதியில், ஐஸ் மற்றும் கஞ்சா போதைப் பொருளுடன், நேற்றைய தினம் (07),  இராணுவத்தினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

துன்னாலைப் பகுதியில், போதை பொருள் வியாபாரத்தில் ஒருவர் ஈடுபடுவதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த இராணுவத்தினர் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

 அவரிடமிருந்து ஒரு தொகை போதைப்பொருளையும் கைப்பற்றியுள்ளனர். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும், அவரிடமிருந்து மீட்கப்பட்ட போதைப்பொருளையும்  நெல்லியடி பொலிஸாரிடம், இராணுவத்தினர் ஒப்படைத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .