Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mayu / 2024 பெப்ரவரி 19 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (19) இளைஞன் ஒருவரால் தனது நண்பருக்கு போதைப்பொருள் கொடுக்கப்பட்டதால் குறித்த நண்பர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
உயிரிழந்த இளைஞன் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான நிலையில் கடந்த 06 மாத கால பகுதிக்கு முன்னர், அவற்றில் இருந்து மீண்டு, வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நண்பனின் அழைப்பின் பேரில் வீட்டுக்கு அருகில் உள்ள இடத்திற்கு சென்ற வேளை போதை பொருளை இளைஞனுக்கு கொடுத்துள்ளனர்.
நீண்ட காலமாக போதைப்பொருள் பாவனையில் இருந்து மீண்ட நிலையில் , மீண்டும் போதைப்பொருளை பாவித்தமையால் , அதீத போதை காரணமாக இளைஞனின் உடல் நிலை மோசமாகியுள்ளது.
அதனை அடுத்து, இளைஞனுடன் போதைப்பொருளை நுகர்ந்த மற்றைய இளைஞன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
இளைஞன் தாயாருக்கு தொலைபேசி அழைப்பு எடுத்து , தனது உடல்நிலை மோசமாக உள்ளதாகவும் , நெஞ்சு வலிப்பதாகவும் கூறியுள்ளார்.
தயார் இளைஞன் கூறிய இடத்திற்கு சென்ற வேளை , மயங்கிய நிலையில் காணப்பட்ட தனது மகனை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை , இளைஞன் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த காங்கேசன்துறை பொலிஸார் , இளைஞனை அழைத்து போதைப்பொருளை கொடுத்த , மற்றைய இளைஞனை கைது செய்து , மருத்துவ பரிசோதனைக்காக சட்ட வைத்திய அதிகாரி முன் முன்னிலைப்படுத்தியதை அடுத்து , வைத்திய அறிக்கையில் இளைஞன் போதைப்பொருள் பாவித்தமை உறுதி செய்யப்பட்டதை அடுத்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
5 minute ago
18 minute ago
29 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
18 minute ago
29 minute ago
45 minute ago